Published : 21 Jun 2020 05:55 AM
Last Updated : 21 Jun 2020 05:55 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். மனைவிவழி உறவினரால் சில காரியங்கள் நிறைவேறும்.

ரிஷபம்: குடும்பத்தில் குதூகலம் காணப்படும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும். அநாவசிய செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: புதிய முயற்சிகள் இழுபறிக்குப் பின்னர் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். கடந்தகால கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள்.

கடகம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். மறைமுகப் பிரச்சினைகள் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படக் கூடும்.

சிம்மம்: பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களை புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். திடீர் பயணம் உண்டு.

கன்னி: பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். எதிர்பாராத சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்துவந்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

விருச்சிகம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். நினைத்த வேகத்தில் வேலைகளை முடிக்க முடியாமல் தடைகள் ஏற்படும். நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

தனுசு: சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பணவரவு உண்டு திருப்தி தரும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

மகரம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்: முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு.

மீனம்: மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடின உழைப்பின் மூலம் வெற்றி காண்பீர்கள். நீண்டகால கடனைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x