Published : 18 Jun 2020 06:37 AM
Last Updated : 18 Jun 2020 06:37 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களுடன் வரம்பு மீறிப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். மாலை முதல் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் எதிர்பாராது மனஸ்தாபம் வந்து நீங்கும்.

மிதுனம்: உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பண வரவு திருப்தி தரும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

கடகம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். உங்களை ஏமாற் றிக் கொண்டிருந்தவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

சிம்மம்: குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

கன்னி: பல வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்களில் இழுத்தடிப் பார்கள். மாலை முதல் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்: மூத்த சகோதரரால் சில காரியங்கள் நிறைவேறும். வாக னத்தை சரி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிலும் நிதானம் தேவை.

விருச்சிகம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதூகலம் நிலவும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒருவரை சந்திப்பீர்கள்.

தனுசு: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

மகரம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வரவேண் டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். புதிதாக வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மீனம்: சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். கடன் தொகை வசூலாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x