Published : 16 Jun 2020 06:23 AM
Last Updated : 16 Jun 2020 06:23 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். நண்பர்கள் தக்கசமயத்தில் உதவுவர்.

ரிஷபம்: உடன் பிறந்தவர்களுடன் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். ரத்த அழுத்தத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மனைவியுடன் எதிர்பாராத கருத்து மோதல்கள் வரும்.

மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பீர்கள்.

கடகம்: சவாலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

சிம்மம்: உங்களின் சாதுர்யம் வெளிப்படும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பணவரவு திருப்தி தரும்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் தலைதூக்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

துலாம்: மனதில் நிலவிவந்த குழப்பங்கள், போராட்டங்களுக்கு விடிவு பிறக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள்.

விருச்சிகம்: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட முயற்சிப்பீர்கள்.

தனுசு: திடீர் யோகம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

கும்பம்: முன்கோபம், பதற்றம் குறையும். தடைபட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடி வரும்.

மீனம்: முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் போன்றவற்றுக்கு நன்கொடை வழங்குவீர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x