Published : 14 Jun 2020 05:58 AM
Last Updated : 14 Jun 2020 05:58 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினராலும், உறவினர், நண்பர்களாலும் செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும் மகிழ்ச்சி உண்டு. வெளிவட்டாரத்தில் பேசும்போது நிதானம் தேவை. திடீர் பயணம் ஏற்படும்.

ரிஷபம்: ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவும். நட்பு வட்டம் விரியும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். மகனிடம் இருந்துவந்த கூடாபழக்க வழக்கங்கள் விலகும். மூத்த சகோதரி உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார். பணவரவு உண்டு.

சிம்மம்: எதிர்மறை விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். எதிலும் நிதானித்து செயல்படுவது பிரச்சினைகளைத் தவிர்க்கும்.

கன்னி: மனோபலம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அடகில் இருந்த நகையை மீட்க வழி பிறக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

துலாம்: பழைய இடத்தை விற்று புது வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்கில் சாதகமான சூழல் நிலவும். மூத்த சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்: வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: பிள்ளைகள் கேட்டதை உடனுக்குடன் வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். பணவரவு திருப்தி தரும்.

மகரம்: தாயாரின் உடல் நலம் சீராகும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

கும்பம்: வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள்.

மீனம்: யாரையும் அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் சந்தேகம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x