Published : 12 Jun 2020 06:32 am

Updated : 12 Jun 2020 06:32 am

 

Published : 12 Jun 2020 06:32 AM
Last Updated : 12 Jun 2020 06:32 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

daily-horoscope

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் பொறுப் புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.

ரிஷபம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் குதூகல மான சூழல் நிலவும். உங்கள் மீது அக்கறை கொண்ட நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆன்மிக காரியங்களை முன்னின்று செயல்படுத்துவீர்கள்.

கடகம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வெளி வட்டாரத்தில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.

சிம்மம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: மூத்த சகோதரரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

விருச்சிகம்: பிள்ளைகளின் உயர் கல்வி குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். எதிர்பாராத பணவரவு உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். பிள்ளை களின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மகரம்: சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். மகளின் திருமணம் குறித்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்தும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மீனம்: உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சகோதரர் பாசமழை பொழிவார். நீங்கள் சாதாரணமாக பேசுவதுகூட தவறுதலாக புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே நிதானித்து செயல்படுங்கள்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Daily horoscopeஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்Astrologyராசி பலன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author