Published : 08 Jun 2020 06:07 am

Updated : 08 Jun 2020 06:07 am

 

Published : 08 Jun 2020 06:07 AM
Last Updated : 08 Jun 2020 06:07 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

raasi-palan

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடன் தொகையை திருப்பி செலுத்துவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். கலைப்பொருட்கள் சேரும். பணவரவு உண்டு.

ரிஷபம்: உறவினர்கள், நண்பர்களுடன் வரம்பு மீறி பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களுக்கு உதவுவதுபோல் உபத்திரவம் தருவார்கள். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். உங்களின் முயற்சிகளுக்கு தாயாரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்.

கடகம்: அரசு காரியங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

சிம்மம்: பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கடனை தீர்க்கும் வழிகள் குறித்து யோசிப்பீர்கள்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்சினையில் சுமுகத் தீர்வு கிடைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப்பொலிவு கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

தனுசு: பண விஷயத்தில் கறாராக இருங்கள். வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

மகரம்: முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

கும்பம்: கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்-. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

மீனம்: உங்கள் அணுகுமுறையில் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. நீண்ட நாட்களாக விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


Raasi palanAstrology12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்இந்தநாள் உங்களுக்கு எப்படி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author