Published : 07 Jun 2020 06:23 AM
Last Updated : 07 Jun 2020 06:23 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: இழுபறியாக இருந்துவந்த காரியங்களெல்லாம் வெற்றிகர மாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ உத்தரவாதமோ தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். சுபகாரியங்கள் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நண்பர்கள் அறிமுக மாவார்கள். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பால் சில காரியங்கள் நிறைவேறும்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு மறையும். பணப் பற்றாக்குறை நீங்கும்.

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல் படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்று எண்ணு வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்: வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பவருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x