இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் காரியங்களை செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

மிதுனம்: புது அனுபவம் உண்டாகும். பழைய சிக்கல்கள் தீரும். குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்
.
கடகம்: முக்கிய வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். புதிய அணுகுமுறையில் பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.

கன்னி: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: இனந்தெரியாத கவலை, எதையோ இழந்ததைப் போன்று மனம் சஞ்சலப்படும். திட்டமிட்டபடி வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. உணவில் காரம், வாயு பதார்த்தங்களை சேர்க்க வேண்டாம். சகோதரர் வகையில் பிரச்சினைகள் வரும்.

மகரம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகளின் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

மீனம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத வகையில் பண வரவு உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in