Published : 28 May 2020 08:12 am

Updated : 28 May 2020 08:12 am

 

Published : 28 May 2020 08:12 AM
Last Updated : 28 May 2020 08:12 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

indha-naal-ungalukku-eppadi

மேஷம்: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும்.

ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும். குடும்பத்தில் திடீர் சலசலப்புகள் வந்து போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். சில காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணம் உண்டு.

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராகும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். நெருங்கியவரிடம் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.

மகரம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும்.

கும்பம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கடனைத் தீர்க்க வழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்ராசிபலன்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author