இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: மகிழ்ச்சி, புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்கள் தடையின்றி நிறைவேறும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம்: நீண்ட நாட்களாக மனதை குழப்பிக் கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். வாகனச்செலவு நீங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்: மனதில் இனம்புரியாத பயம், பதற்றம் வந்து போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். யாரை நம்புவது என்கிற குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.

கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்: புது முயற்சிகள் வெற்றியடையும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்வதற்கு திட்டமிடுவீர்கள்.

கன்னி: எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைபட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு.

விருச்சிகம்: கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், அவமானங்களை நினைத்து தூக்கம் கெடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: உங்கள் மீது அக்கறை கொண்டவர்களிடம் கலந்தாலோசித்து எதிர்காலத்துக்கென திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மீனம்: தெளிவான முடிவுகளை எடுத்து குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்துவீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in