இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: வீண் அலைச்சல், அநாவசிய செலவுகள் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுபகாரியத்துக்கு ஏற்பாடாகும்.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்டநாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் சாதகமாக அமையும். மனைவிவழி உறவினரின் ஆதரவு உண்டு.

கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகம், யோகா, தியானம் இவற்றில் மனம் லயிக்கும்.

சிம்மம்: சுறுசுறுப்பாக செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்.

கன்னி: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனதில் நிலவிய குழப்பம், சஞ்சலங்கள் நீங்கும். விஐபி.க்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

துலாம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். நீண்ட நாட்களாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் தொடர்பு கொள்வார்கள். வீட்டில் சுபகாரியம் நிகழும்.

விருச்சிகம்: மறைமுக எதிர்ப்பு, அவமானம் ஏற்படக்கூடும். அடுத்தடுத்த சுபச்செலவுகளால் சேமிப்புகள் கறையும். கடன் பிரச்சினைகளை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள்.

தனுசு: வீண் அலைச்சல், தூக்கமின்மை ஏற்படக் கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். உடன்பிறந்தவர்களால் எதிர்பாராத சங்கடங்கள் வந்து நீங்கும்.

மகரம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய பிரச்சினைகளில் வெற்றி பெறுவீர்கள். பணம் வரவு உண்டு. முக்கிய பதவிக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மீனம்: நினைத்த காரியம் தடைகளின்றி நிறைவேறும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். மகளின் திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in