இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மிதுனம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கடகம்: குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் பகை வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: மனக்குழப்பம் விலகி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் ஆறுதலான பேச்சால் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்: பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டியது வரும். உதவி கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்

தனுசு: குடும்பத்தில் மதிப்பு கூடும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களிடம் பேசி மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள்.

மகரம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.

கும்பம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்: காரியங்களை துடிப்புடன் நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை முடிவுக்கு வரும். வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாருடன் எதி்ர்பாராமல் கருத்துமோதல் வரக்கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in