இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: எதிரிகளை சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள். வழக்குகள் சாதகமாகும். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தை யின் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டு.


ரிஷபம்: வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் கனிந்து வரும். வங்கிக் கடன் கிட்டும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.


மிதுனம்: பெற்றோரின் உடல் நிலை எதிர்பாராமல் பாதிக்கக் கூடும். வீண் அலைச்சல், தடை, தாமதம் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்பு் செலவு திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.


கடகம்: குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.


சிம்மம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம். பணத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும்.


கன்னி: வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் வீட்டை விரிவு படுத்தி கட்டுவது குறித்து யோசிப்பீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள்.


துலாம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.


விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.


தனுசு: புகழ் பெற்ற வேற்று மாநிலப் புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் விருப் பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயாரின் ஆதரவு உண்டு.


மகரம்: ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களை அடிக்கடி நினைத்து வருந்துவீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாகும்.


கும்பம்: தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்து போகும். அரசு விவ காரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். பிள்ளைகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் எரிச்சலை ஏற்படுத்தக் கூடும்.


மீனம்: உயர் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனைவி வழி உறவினரின் உதவி கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகும். பணத் தட்டுப்பாடு நீங்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in