இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: வி.ஐ.பிகள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். அரசாங்கத்தால் ஆதாயம் வரும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

ரிஷபம்: பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சொத்து தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க நண்பர்களின் ஆலோசனைகளும், உதவியும் கிடைக்கும். தீடீர் பணவரவு உண்டு.

மிதுனம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பச் சூழ்நிலை அறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கடகம்: மனதில் தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுத்து வெற்றியும் பெறுவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். பணவரவு திருப்தி தரும்.

கன்னி : எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

துலாம்: உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிருங்கள். சொல்ல வருவதை நாசூக்காகவும், மென்மையாகவும் எடுத்துச் சொல்லுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்..

விருச்சிகம்: பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

தனுசு: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும்.

மகரம்: பழைய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: வேலைச்சுமை குறையும். வழக்குகள் சாதகமாகும். ஆரோக்கியம், அழகு கூடும். பெற்றோருடன் இருந்துவந்த மனத்தாங்கல் விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

மீனம்: வாகனம் அவ்வப்போது செலவு வைக்கும். வீடு பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும். பெற்றோருடன் எதிர்பாராது கருத்து வேறுபாடு ஏற்படலாம். நாவடக்கம் மிகவும் அவசியம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in