

மேஷம்
வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு உண்டு. ஆதரவற்றவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம்
நம்பிக்கை, உற்சாகம் கூடும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டில் மகிழ்ச்சி, குதூகலம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள்.
மிதுனம்
உங்கள் பேச்சில் நம்பிக்கை பளிச்சிடும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் திறமைகளை அறிந்து உற்சாகப்படுத்துவீர்கள்.
கடகம்
உறவினர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். ஏழைகள், ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்து மகிழ்வீர்கள்.
சிம்மம்
மனதில் இருந்த அச்சம், குழப்பங்கள் நீங்கி, தைரியமும், தெளிவும் பிறக்கும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.
கன்னி
வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சேதி வரும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாக புரிந்துகொள்ளக்கூடும் என்பதால், பேச்சில் அதிக நிதானம் தேவை.
துலாம்
இடையூறுகள், தடைகள் வந்தாலும் உங்கள் முடிவில் உறுதியாக இருப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். அத்தியாவசிய செலவு அதிகரிக்கும்.
விருச்சிகம்
வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் தொடர்புகொண்டு மனம்விட்டுப் பேசுவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் உண்டு.
தனுசு
உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து கூடும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். தர்மகாரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும்.
மகரம்
இதுநாள் வரை இருந்த அலைச்சல், அசதி, சோர்வுகள் நீங்கி உற்சாகமும், புத்துணர்ச்சியும் மலரும். தொழில் வளர்ச்சி குறித்து சிந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
கும்பம்
அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களை குறை கூறாதீர்கள். எக்காரியத்திலும் நிதானம், பொறுமை தேவை.
மீனம்
கணவன் - மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவீர்கள். பணவரவு உண்டு.
******
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |