இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: சகோதரரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள் திருமண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்று நடப்பார்கள்.


ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.


மிதுனம்: பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பணவரவு உண்டு.


கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டில் நல்ல மாற்றம் தெரியும். பணவரவு உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.


சிம்மம்: பழைய சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள். பண விஷயத்தில் அதிக கவனம் அவசியம். நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த வேலைகள் விறுவிறுப்பாக நடக்கும்.


கன்னி: கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்த்து, சேமிப்பில் கவனம் செலுத்து வீர்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வந்து நீங்கும்.


துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.


விருச்சிகம்: பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். சகோதர, சகோதரிகள் பாசமழை பொழிவார்கள். சாதுர்யமாக பேசி, கடினமான காரியங்களை சாதிப்பீர்கள்.


தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளிப்பார்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணவரவு உண்டு.


மகரம்: நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். குழப்பம், கவலைகள் நீங்கி தெளிவும், மகிழ்ச்சியும் பிறக்கும்.


கும்பம்: பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். திருமண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு. பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும்.


மீனம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in