இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்

வீடு, மனை வாங்குவது குறித்து திட்டமிடுவீர்கள். தாய் வழி உறவுகளுடன் மனக்கசப்புகள் வந்து நீங்கும். நண்பர்கள் வகையில் ஆதாயம் உண்டு.

ரிஷபம்

அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்தாலும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். தோல்வி பயம் நீங்கும். சகோதரி உதவுவார். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.

மிதுனம்

குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்

எதற்கும் கோபப்படாமல், பொறுமையாக இருப்பது அவசியம். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். பணவரவு உண்டு.

சிம்மம்

நீண்டகால நண்பருடன் மனஸ்தாபம் ஏற்பட்டு விலகும். எதிலும் எச்சரிக்கை அவசியம். அரசு, வங்கி காரியங்களில் சிறு தடைகள் வரக்கூடும்.

கன்னி

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்கள் பலம், பலவீனத்தை அறிந்து, அதற்கேற்ப செயல்படுவீர்கள். பேச்சில் நிதானம் தேவை.

துலாம்

சமூகத்தில் செல்வாக்கு கூடும். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். மகள் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்

பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதால் மகிழ்ச்சி கூடும்.

தனுசு

எக்காரியத்திலும் பொறுமை அவசியம். உங்கள் சக்திக்கு மீறி யாருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும்.

மகரம்

சமயோசித புத்தியால் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதார்த்தமாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

கும்பம்

பழைய நண்பர்களை தொடர்புகொண்டு பேசுவீர்கள். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக இருப்பார்கள். பொருள் வரவு உண்டு.

மீனம்

உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் இருங்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவு குறையும்.

*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in