இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடியும்.

ரிஷபம்: எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படும்.

மிதுனம்: பிள்ளைகளின் செயல்பாடுகள் டென்ஷனை ஏற்படுத்தும். உடல்நலம் பாதிக்கக் கூடும். அக்கம்பக்கத்தினரால் வீண் சச்சரவு ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.

கடகம்: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுத்து வெற்றியும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகை வசூலாகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பீர்கள். சிலர் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: தயக்கம், காரியத் தாமதம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. நண்பர்களில் சிலர் உதவுவதைப்போல் உபத்திரவம் தருவார்கள்.

விருச்சிகம்: தன் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வேற்றுமதத்தைச் சேர்ந்த ஒருவர் தக்க சமயத்தில் உதவுவார்.

மகரம்: கனவுகள் நனவாகும் காலம் கனிந்து வரும். பிள்ளைகள் கேட்டதை உடனுக்குடன் வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கும்பம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு சாதகமான தகவல் வரும்.

மீனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in