இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: அலுவல்களை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக செய்து முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம்.


ரிஷபம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். செய்நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் உண்டாகும்.


மிதுனம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். நட்பு வழியில் நல்ல சேதி வரும். தாய் வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு உண்டு.


கடகம்: உறவினர், நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். வீண் செலவுகளைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.


சிம்மம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். விலகிச் சென்றவர்கள் தொடர்புகொண்டு பேசுவார்கள்.


கன்னி: குடும்பத்தில் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்க வேண்டாம். அவதூறுகள், தடைகளைப் பொருட்படுத்தாமல் கடமையை செய்வீர்கள். பொருள் வரவு உண்டு.


துலாம்: சகோதர உறவுகளால் பயனடைவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். பேச்சில் பொறுமை தேவை.


விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. உறவினர், வழக்கு, சொத்து விவகாரங்களில் சாதகமான திருப்பம் ஏற்படும். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும்.


தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த் தனைகள் நிறைவேறும். ஆன்மிகம், தியானம் போன்றவற்றில் நாட்டம் ஏற்படும். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.


மகரம்: புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. பெற்றோர் வகையில் மருத்துவச் செலவுகள் வந்து போகும். சகோதர உறவுகளுடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். பணவரவு உண்டு.


கும்பம்: போட்டி, சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இழுபறியாக இருந்த சொத்து பிரச்சினையில் சுமுக தீர்வு கிடைக்கும். பொருட்கள் சேரும்.


மீனம்: சலசலப்புகள் ஓய்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in