Published : 25 Mar 2020 09:23 am

Updated : 25 Mar 2020 09:23 am

 

Published : 25 Mar 2020 09:23 AM
Last Updated : 25 Mar 2020 09:23 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

indha-naal-ungalukku-eppadi

மேஷம்: பிறமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பால்ய நண்பர்களால் தொந்தரவுகள் ஏற்படக் கூடும். வாகனம் செலவு வைக்கும்.


ரிஷபம்: தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.



மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீடு வாங்குவது, விற்பது நினைத்தபடி முடியும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு.


கடகம்: சமயோசிதமாக செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.


சிம்மம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். சிறுசிறு உடல்நலக் குறைவு ஏற்படலாம். மனைவியுடன் கருத்துவேறுபாடு வரும்..


கன்னி: மனைவிவழி உறவினர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.


துலாம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். குடும்பச் சூழ்நிலை அறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.


விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும்.


தனுசு: பழைய சிக்கல்களுக்கு புதிய முறையில் தீர்வு காண்பீர்கள். வீடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகை உண்டு.


மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.


கும்பம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.


மீனம்: வீண் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினருடன் எதிர்பாராத பகை, நண்பர்களுடன் மனத்தாங்கல் வரக்கூடும். சில காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்ராசிபலன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author