இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: நவீன மின்சாதனம் வாங்குவீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.

மிதுனம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கடகம்: அனுபவப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும்.

துலாம்: பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகை உண்டு.

விருச்சிகம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.. அழகு, இளமை கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

தனுசு: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைகூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ள முயற்சியுங்கள். திடீர் பயணம் உண்டு.

மகரம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டியது வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு, வாகனம் வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

மீனம்: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in