மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025
Updated on
2 min read

மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை
யடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். புதிய யுக்திகளை கையாள்வீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

மிதுனம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.

கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு கூடும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்ப்பீர்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.

துலாம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். அக்கம் பக்கத்தினரின் அன்புத்தொல்லை நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும். அலுவலகத்தில் யாரையும் குறை சொல்ல வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். லாபம் பார்ப்பீர்.

விருச்சிகம்: பணவரவால் கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.

தனுசு: திட்டமிட்ட பணியை முழு மூச்சுடன் முடித்துக் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் நிம்மதி உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவி தேடி வரும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த பகை நீங்கும். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்பம்: சோகம் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். அக்கம் பக்கத்தினரை அனு
சரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். காரியத்தடை வரக் கூடும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in