

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.
ரிஷபம்: நினைத்த காரியம் நிறைவேறும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகள் குடும்ப சூழல் அறிந்து செயல்படுவர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் அலைச்சல், டென்ஷன் விலகும். மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு கடையை மாற்றுவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம்: தட்டு தடுமாறி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்துப் போவது நல்லது. அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
சிம்மம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.
கன்னி: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மதிப்பு உயரும்.
துலாம்: திட்டமிட்ட வேலைகளை பாடுபட்டு முடிக்க வேண்டி வரும். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டி குறையும். புதிய இடத்தில் கிளை அமைப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி பிறக்கும். உறவினர், நண்பர்களால் செலவுகள் வரலாம். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.
மகரம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கும்பம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கைகூடி வரும். பணவரவு உண்டு. வீடு, வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மதிப்பு உயரும்.
மீனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் செலவுகள் வரும். நண்பர்கள் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். புதிய பங்குதாரரை அலட்சியப்படுத்த வேண்டாம். உத்தியோகம் சிறக்கும்.