மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 நவம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 நவம்பர் 2025
Updated on
2 min read

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புது உத்திகளைக் கையாளுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

ரிஷபம்: தடைபட்ட கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். வீடு, கடையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வியாபாரம் திருப்திகரமாக அமையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நலம் சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

கடகம்: முன்கோபத்தைக் குறையுங்கள். வியாபாரத்தில் வராது என்று நினைத்த பழைய பாக்கிகள் வசூலாகும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களுக்கு ஜாமீன் கையெழுத்திடுவது, வேலைக்கு பரிந்துரை செய்வது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்: தீராத பிரச்சினையில் இருந்து விடுபட மாற்று வழியைக் கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப்பொலிவு அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும்.

கன்னி: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். பண வரவு, பொருள் வரவு உண்டு. தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அலுவலகத்தில் வேலைச் சுமை குறையும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

துலாம்: வெளிப்படையாகப் பேசி, சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல்சோர்வு, வயிற்றுவலி வந்து குணமாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

தனுசு: குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து செயல்படுங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வீண் கோபத்துக்கு இடம்தராதீர்கள். பணம், நகை, முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள்.

மகரம்: வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவி கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். தொழில், வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் அதிகரிக்கும். மகான்களின் ஆசி கிடைக்கும்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தசில முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலக ரீதியான பிரச்சினைகள் ஓயும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in