மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 நவம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 நவம்பர் 2025
Updated on
2 min read

மேஷம் : எந்த காரியத்தையும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்.

ரிஷபம் : மனக்குழப்பங்கள் விலகும். பிள்ளைகளின் சாதனைகளால் நிம்மதி உண்டு. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர்.

மிதுனம் : பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர். குடும்ப உறுப்பினர்களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கடகம் : உடன்பிறந்தவர்கள் ஆதரவு தருவார்கள். உங்கள் தன்னம்பிக்கைக்கேற்ப சில விஷயங்கள் நடக்கும். பண வரவு திருப்தி தரும். தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

சிம்மம் : பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடி வந்துசிலர் உதவி கேட்பர். தைரியமாக முடிவுகள் எடுப்பீர். ஆன்மிகவாதிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவைப் பெறுவீர். லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.

கன்னி : பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். சகோதரர்களின் ஆதரவு கிட்டும். வருங்காலத்தை நினைத்து முக்கிய முடிவு எடுப்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

துலாம் : குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம் : சேமிப்பு கரையக் கூடும். கணவன் மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

தனுசு : திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். தம்பதிக்குள்இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

மகரம் : மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம் : பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வராதிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும்.

மீனம் : வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர். அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பர். ஆன்மிகவாதிகளை சந்திப்பீர். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in