

மேஷம்: தடைபட்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் போட்டிகளை தகர்ப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
ரிஷபம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிட்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். வியாபாரம், அலுவலகத்தில் உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் மறைமுக அவமானம் ஏற்படலாம். சொந்த ஊர் சென்று வருவீர்கள். கோயில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் விமரிசையாக நடக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
சிம்மம்: புதிய சிந்தனைகள் தோன்றும். மனைவிவழி உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். சகோதரர்கள் ஆதரவு தருவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: மனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். தம்பதிக்குள் அனுசரித்து போவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு கடையைமாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.
துலாம்: குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் சேரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம்.
விருச்சிகம்: நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வர். உடல் நலத்திலும் கவனம் தேவை. தொடர் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிக்க போராட வேண்டியிருக்கும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.
தனுசு: புத்திசாலித்தனமாக நடக்கவும். நண்பர்கள் தேடி வருவர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். அலுவலகரீதியான பயணங்களால் உற்சாகமடைவீர்கள். உயரதிகாரிகளுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும்.
மகரம்: எதிர்பார்த்து காத்திருந்த பணம் வருவதால் மனநிம்மதி கிட்டும். மனைவிவழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்று
வீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரம் சிறக்கும்.
கும்பம்: மனதுக்கு இதமான செய்தி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உடல்சோர்வு, வயிற்றுவலி சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சேமிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம் திருப்தி தரும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறிக் கொண்டிருக்காதீர்.