

மேஷம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வர வாய்ப்பு உண்டு. எதற்கும் அவசரப்பட வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.
மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர்.
கடகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். தம்பதிக்குள் அனுகூலம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். ஓரளவு லாபம் உண்டு.
சிம்மம்: செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கன்னி: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: அதிரடியான முடிவுகளை எடுக்காதீர்கள். திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனக்குழப்பங்கள் நீங்கும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாள்வீர். அலுவலகத்தில் எதிலும் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.
தனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர். தாய்வழி உறவினர்களுடன் இருந்த பகை விலகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: பணவரவு உண்டு. தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கும்பம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவர். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். பொறுப்புகள் கூடும்.
மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணப்புழக்கம் கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரிப்பர்.