

மேஷம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
ரிஷபம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவர். சொத்து விவகாரத்தில் நல்ல தீர்வு ஏற்படும். வியாபாரரீதியாக சில மாற்றங்கள் செய்வீர். கடையை நல்ல இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
மிதுனம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
கடகம்: எதிர்பார்த்து காத்திருந்த பணம் வரும். பழுதான பொருட்களை மாற்றுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
சிம்மம்: தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்தோர் ஒத்தாசையாக நடந்து கொள்வார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். மேலதிகாரி பாராட்டுவார்.
கன்னி: தம்பதிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. செலவு கட்டுக்கடங்காமல் போகும். இல்லத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். வியாபாரத்தில் பழைய பாக்கியை போராடி வசூலிப்பீர். அலுவலகரீதியாக பிரபலங்களின் அறிமுகம் கிட்டும்.
துலாம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உதவிகள் கிட்டும். பழைய நண்பர்களிடம் இருந்த பகை நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பர். வேற்றுமொழி பேசுபவரால் ஆதாயமடைவீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த விஐபிகள் உதவுவர்.
தனுசு: சோர்வு நீங்கி, உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள். வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். கூட்டுத் தொழிலில் வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப்புழக்கம் கூடும். வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாட்கள் அன்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.
கும்பம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். நண்பர்கள் உதவுவர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும்.வீட்டில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிர்பாராத செலவுகள் கையைக் கடிக்கும். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறிக் கொண்டிருக்காதீர்கள்.