

மேஷம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்: குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பழைய பொருட்களை மாற்றுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.
மிதுனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். வாகனச் செலவுகள் நீங்கும். அரசு, வங்கி வகையில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். புதிய பதவி, பொறுப்புகள் தேடிவரும்.
கடகம்: குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். வழக்கில் சாதகமான திருப்பம் வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். விசேஷங்கள், பொதுக் காரியங்களை முன்னின்று நடத்தி, பாராட்டு பெறுவீர்கள். பொருட்கள் சேரும்.
சிம்மம்: மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்திடுவது, உறுதிமொழி தருவது, வேலைக்கு பரிந்துரை செய்வது ஆகியவை வேண்டாம். திடீர் செலவினங்கள், அலைச்சல், அசதி அதிகரிக்கும். பெற்றோர் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீண்கோபத்தை குறையுங்கள்.
கன்னி: வீட்டுக்குத் தேவையான நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் பேச்சுக்கு செவிசாய்ப்பீர்கள். அக்கம் பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவார்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.
துலாம்: வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருவதால், வீடு களைகட்டும். பண வரவால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று, நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்கள் விலகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் பழைய பொருட்களை மாற்றுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வீண் செலவு, அலைச்சல் குறையும். வீடு, கடையை விரிவுபடுத்திக் கட்ட முயற்சி மேற்கொள்வீர்கள்.
தனுசு: உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும்.
மகரம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் கவுரவம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள், விருந்தினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும்.
கும்பம்: இங்கிதமாக, சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வார்கள். நீண்ட நாட்களாக செல்ல நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பல வகையிலும் பொருட்கள் சேரும்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வெளியூர் பயணம், அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டாகும். பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். வீண் அச்சம், கவலைகளுக்கு இடம்தராமல் நிதானமாக இருப்பது அவசியம்.