

மேஷம் : சகோதரர்களால் ஆதாயமுண்டு. பேச்சில் தெளிவு பிறக்கும். முரண்டு பிடித்த பிள்ளைகள் சொல் பேச்சு கேட்பர். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
ரிஷபம் : புது முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பர். குழப்பம் நீங்கி தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடன் பிரச்சினை தீரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம் : சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக்காட்டுவீர். உறவினர் மத்தியில் மதிப்புயரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்கவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம் : எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவு கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
சிம்மம் : குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிக்க போராடுவீர்.
கன்னி : நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வீர். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபார போட்டிகள் விலகும். உத்தியோகம் சிறக்கும்.
துலாம் : மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பணவரவு உண்டு. மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும்.
விருச்சிகம் : குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, கூடும். இல்லத்தில் மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். கவுரவ பதவிகள் தேடி வரும். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்.
தனுசு : குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர். மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு கடையை மாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மகரம் : தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பணியாட்கள் அன்பாக இருப்பார்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம் : தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
மீனம் : புதிய முயற்சிகளை சற்று தாமதப்படுத்தவும். குடும்பத்தில் யாரை மனதையும் புண்படுத்தாமல் மிகவும் நிதானமாக பேசவும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர். வியாபாரம் சிறக்கும்.