மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 அக்டோபர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 அக்டோபர் 2025
Updated on
2 min read

மேஷம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதால் காரியங்கள் நிறைவடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து செயல்படுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் வராது என்றிருந்த தொகை தானாக வந்து சேரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்: தடைபட்ட காரியங்கள் முடியும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்.

கடகம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர். வியாபாரம் சூடி பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திக்க வேண்டிவரும்.

கன்னி: கையில் பணம் புரளும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். உடல்நலம் சீராகும். அரசாங்க அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

துலாம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் முடியும். பிள்ளைகளின் நடவடிக்கையை கவனிக்கவும். மனதில் குழப்பங்கள் வந்து போகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

விருச்சிகம்: வெளியூர் பயணங்கள் மனநிம்மதியை தரும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார். எந்த வேலையையும் தாமதப்படுத்த வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரிப்பர்.

தனுசு: திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். முன்கோபம் தவிர்ப்பீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலக பயணங்கள் திருப்தி தரும்.

மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் கூடும். நவீன மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை ஓரளவு குறையும்.

கும்பம்: மறைமுக போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.

மீனம்: குடும்பத்தினரிடம் விவாதங்கள் வேண்டாம். வாகனத்தில் நிதானமாக பயணம் செய்யவும். அலுவலக பணிச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வரக்கூடும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமுண்டு. எதிலும் எச்சரிக்கை தேவை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in