மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 அக்டோபர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 அக்டோபர் 2025
Updated on
2 min read

மேஷம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரபலங்கள் நண்பர்களாவர். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். யோகா, ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

மிதுனம்: திட்டமிட்ட காரியம் கைகூடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். மேலதிகாரி பாராட்டுவார்.

கடகம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சிலவேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும்.

சிம்மம்: நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருந்துவீர். திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வியாபாரத்தில் அலைச்சல் கூடும். போராடி வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

கன்னி: உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். திடீர் பணவரவால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆதரவுண்டு. கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். நண்பர்கள் மூலம் உதவி பெறுவீர். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராக் கடன் என்றிருந்த பழைய பாக்கிகள் வரும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர். குடும்பத்தினரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் வரும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி வரும்.

தனுசு: நீண்டநாள் கனவு, விருப்பங்கள் நிறைவேறும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். தாயார், பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மகரம்: திட்டமிட்ட காரியங்களை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர். தடுமாற்றங்கள் நீங்கும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.

கும்பம்: வெளிவட்டாரத்தில் அனாவசிய பேச்சுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வரும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பாராத பேர், புகழ் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: எதிர்காலத்தை பற்றிய பயம், கவலை விலகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களைப் பற்றி தலைமையிடத்தில் புகார் கூறுவதை தவிர்ப்பது நல்லது. பணிச்சுமை குறையும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in