மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 அக்டோபர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 அக்டோபர் 2025
Updated on
2 min read

மேஷம்: இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: திட்டமிட்ட வேலைகளை போராடி முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்பத்தில் கருத்துமோதல் வரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

மிதுனம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கடன் தொகையை திரும்பச் செலுத்த வழி பிறக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் சிலருக்கு பெரிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்: அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தால் இனி வீண் செலவு இருக்காது. வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர்கள். போட்டியை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கன்னி: அடிமனதிலிருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணப்புழக்கம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

துலாம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். எதிர்பாராத செலவுகள் வரும். சகோதரர்களிடம் முன்கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: வீட்டிலுள்ளவர்களிடம் அன்பாக பேசவும். பாதியில் நின்ற பணி முடியும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களை குறை கூறவேண்டாம். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

தனுசு: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத் தில் புதிய யுக்திகளைக் கையாண்டு அனைவரையும் கவருவீர்கள்.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புது ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினரால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

கும்பம்: தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். தனிப்பட்ட முறையில் முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.

மீனம்: தடைகள் உடைபடும். புது எண்ணங்கள் மனதில் தோன்றும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உறவினர், நண்பர்களால் ஆதாயமுண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in