மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 அக்டோபர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 அக்டோபர் 2025
Updated on
1 min read

மேஷம்: உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால், தடைபட்டிருந்த வேலையை முடித்துக் காட்டுவீர்கள். சில பிரச்சினைகளுக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள்.

ரிஷபம்: எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.

மிதுனம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப் பார்கள். பழைய கடன் வசூலாகும்.

கடகம்: உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். அரசு காரியங்கள் நல்லபடியாக முடியும்.

சிம்மம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். யாரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வேலைச் சுமை அதிகரிக்கும்.

கன்னி: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனப் பழுது நீங்கும்.

துலாம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி கிடைக்கும். பெற்றோர் உடல்நலம் சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

விருச்சிகம்: சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் விலகும்.

தனுசு: வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்ப்பீர்கள். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும்.

கும்பம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.

மீனம்: திடீர் பயணம், உறவினர்கள் வருகையால் செலவு கூடும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in