மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 அக்டோபர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 அக்டோபர் 2025
Updated on
1 min read

மேஷம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கூடும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

ரிஷபம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியம் வெற்றி அடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்பால் சிலபணிகளை முடிப்பீர். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரம் சிறக்கும். அலுவலகரீதியான பயணத்தால் ஆதாயம் உண்டு.

கடகம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர். முடியாமல் போன சில காரியங்களை முடிப்பீர். தம்பதிக்குள் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

சிம்மம்: விரயச் செலவுகள் கையிருப்பை குறைக்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும், அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தாரை அனுசரித்துப் போவீர். பிள்ளைகளிடமிருந்த மனக்கசப்பு விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

துலாம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியம் கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். சகோதரர்களால் நன்மையுண்டு. அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. மறைமுக போட்டிகளுக்கு பதிலடி தருவீர். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்கவும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்.

தனுசு: தம்பதிக்குள் இருந்த கருத்து மோதல் விலகும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபார ரீதியான பயணங்கள் திருப்தி தரும். உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் உதவி கிட்டும். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

கும்பம்: உடல்நலக் குறைவு, மனச்சோர்வுவரக் கூடும். திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் திணருவீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படும் வாய்ப்பு உண்டு.

மீனம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in