

மேஷம்: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்ப உறுப்பினர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்.
ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலக விஷயமாக பயணங்கள் மேற்கொள்வீர்.
மிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கடகம்: உறவினர், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
சிம்மம்: பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழியை கண்டறிவீர். குடும்பத்தில் உங்க கை ஓங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கன்னி: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். வியாபாரத்தில் பணியாட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
துலாம்: வீடு, வாகனப் பராமரிப்பு செலவு கூடும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள்வது நல்லது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிட்டும்.
விருச்சிகம்: திட்டமிட்ட பணியை செய்ய போராட வேண்டியிருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தாயாரின் ஆரோக்கியம் திருப்தி தரும். வியாபாரத்தில் பங்குதாரர்களை சமாளிப்பீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவடையும். மனைவி, தாயாரின் உடல்நிலை ஓரளவு சீராகும். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும்.
மகரம்: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.
கும்பம்: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு சாதிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்து செல்லும். முன்கோபத்தை தவிர்க்கவும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் எச்சரிக்கையாக தேவை.