மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 செப்டம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 செப்டம்பர் 2025
Updated on
1 min read

மேஷம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.

ரிஷபம்: தட்டு தடுமாறிக் கொண்டிருந்த நிலை மாறி தைரியமான முடிவுகளை எடுப்பீர். தாய்வழியில் ஆதரவு உண்டு. வியாபார விஷயமாக பயணம் மேற்கொள்வீர். அலுவலகத்தின் தலைமையிட அதிகாரிகளை சந்திப்பீர்.

மிதுனம்: ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். அலுவலக விஷயமாக முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வர வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாட்கள் அனுசரணையாக நடப்பர்.

கடகம்: தடைபட்டுக் கொண்டிருந்த பணிகள் முடிவுக்கு வரும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர். யோகா, ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

சிம்மம்: தம்பதிக்குள் விட்டுக்குக் கொடுத்து போகவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கன்னி: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

துலாம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வர். வியாபாரத்தில் மேன்மையுண்டு. அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

விருச்சிகம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். நண்பர்கள் வீடு தேடி வருவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

தனுசு: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு கடையை மாற்றுவீர்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டவும். வியாபாரத்தில் எதிலும் அவசரப்பட வேண்டாம். அலுவலக விஷயமாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.

கும்பம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் போட்டியை தகர்ப்பீர். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்.

மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவி, பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பணப் புழக்கம் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in