

மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும்.
ரிஷபம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டி விலகும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும்.
மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி, பழைய பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள், அரசால் அனுகூலம் உண்டாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
கடகம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். முக்கிய பிரமுகர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சிம்மம்: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள்.
கன்னி: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பண வரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருப்பீர்கள்.
துலாம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை அறிந்து கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய வேலை அமையும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்: ஒதுங்கியிருந்த உறவினர்கள், நண்பர்கள் ஓடிவந்து பேசுவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.
தனுசு: பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீண் செலவை குறைத்து சேமிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வேற்று மொழி வாடிக்கையாளர்கள் வருவார்கள். பண வரவு உண்டு.
கும்பம்: அரசு, வங்கி காரியங்களில் இருந்த தடை விலகும். வெளி வட்டார தொடர்பு அதிகரிக்கும். பயணம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
மீனம்: எடுத்த வேலைகள் தடைபட்டு முடியும். வியாபாரத்தில் போட்டி இருந்தாலும், சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.