

மேஷம்: இங்கிதமான பேச்சால் அனைரையும் கவருவீர். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். கூட்டுத்தொழிலில் போட்டிகள் குறையும்.
ரஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்காதீர்கள். உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளவும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மிதுனம்: மனப் போராட்டம் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் போட்டி நீங்கும். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகுங்கள். தம்பதிக்குள் மனக்கசப்புகள் வரக் கூடும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
சிம்மம்: கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். மின் சாதனங்களை மாற்றும் முயற்சிகளில் இறங்குவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஏற்றம் உண்டு.
கன்னி: தொட்டதெல்லாம் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் எளிதாக நிறைவேறும். வியாபாரம், அலுவலகத்தில் இருந்த குழப்பம் விலகும்.
துலாம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
விருச்சிகம்: கசப்பான சம்பவங்களை நினைக்காதீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
தனுசு: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.
மகரம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் திட்டமிட்ட வேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர்.
கும்பம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வரக் கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் புதிய முடிவு எடுக்காதீர்கள். அலுவலகரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு.
மீனம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியுண்டு.