

மேஷம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர். ஆன்மிக நாட்டம் கூடும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்கள் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.
மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். பிரபலங்கள் நண்பர்களாவர். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
சிம்மம்: மனதில் இருந்த பயம் விலகும். பணவரவு உண்டு. பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயல்வீர்.
கன்னி: விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சகோதர வகையில் உதவி கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுபடுத்துவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
துலாம்: நேர்மறை சிந்தனைகள் மனதில் உற்சாகத்தை தரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரரீதியாக பழைய நண்பர்களை சந்திப்பீர். பணியாட்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பீர்.
விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பணவரவு திருப்தி தரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
தனுசு: சுறுசுறுப்புடன் செயல்களை விரைந்து முடிப்பீர். சிந்தனைத் திறன் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். பாக்கி வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: அனைவரிடமும் இங்கிதமாக பேசவும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகவும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக் கூடும்.
கும்பம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மீனம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.