இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: உங்கள் சுவாரஸ்ய பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். உற்சாகம், தோற்ற பொலிவு கூடும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடப்பார்கள். பயணம் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டி குறையும்.

ரிஷபம்: வீண் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். தெய்வ வழிபாடு மனநிறைவு, அமைதியை தரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. யாரையும் எடுத்தெறிந்து பேச கூடாது.

மிதுனம்: யாரிடமும் பழைய கசப்பான சம்பவங்களை பேச வேண்டாம். உடல்நலம், உணவு பழக்கத்தில் அக்கறை காட்டுங்கள். தடைகள், இடையூறுகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் முன்னேறுவீர்கள்.

கடகம்: தேவையற்ற மன போராட்டங்கள் ஓயும். உங்கள் சமயோசித பேச்சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பண வரவு உண்டு. வியாபாரத்தில் போட்டி நீங்கும்.

சிம்மம்: தொட்ட காரியம் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனடியாக நிறைவேறும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

கன்னி: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். தொழில், வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள்.

துலாம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைவீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: மின்சார சாதனங்கள், கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் பொறுமை தேவை.

தனுசு: சாதுர்யமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தருவார்கள். பணம், நகை, கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்று தீரும்.

மகரம்: உங்கள் பேச்சாற்றல், ஆளுமை திறன் அதிக ரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த தீவிர முயற்சி மேற்கொள்வீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தில் இருந்த பழுது நீங்கும்.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு, வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடல்நலம் சீராகும். தொழில், வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in