இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: வேற்றுமதத்தினரால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு பயணம் கைகூடும். குடும்பத்தில் அமைதி திரும்பும். உத்தியோகம் சிறக்கும்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

மிதுனம்: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிட்டும். மனைவிவழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழியை கண்டறிவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆரோக்கியம் கூடும். வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவர். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். தாயாரின் ஆரோக்கியம் திருப்தி தரும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள்.

துலாம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். கவுரவ பதவி தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகையால் பணம் வரும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

விருச்சிகம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரம், உத்தியோகம் திருப்திகரமாக அமையும்.

தனுசு: தம்பதிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். நவீன சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர், நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்ப்பீர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: தவிர்க்க முடியாத செலவு, பயணங்கள் வரும். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் சிறு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்: மனதில் உற்சாகம் பிறக்கும். பிரபலங்களுக்கு நண்பராவீர். அவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். தொழிலில் வேலையாட்களை மாற்றுவீர். உத்தியோகம் சிறக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in