இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: மனதில் இருந்த பயம் நீங்கி, தைரியம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும்.

ரிஷபம்: நீங்கள் விரும்பிய புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பண வரவு உண்டு. உங்கள் ரசனைக்கு ஏற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள்.

மிதுனம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

கடகம்: போட்டி, சவால்களை எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். உடல்நலத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை.

சிம்மம்: பழைய பிரச்சினைகள் சுமுகமாக தீரும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பெற்றோர் உடல்நிலை சீராகும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

துலாம்: வெகு நாளாக மனதை வாட்டிய பிரச்சினைக்கு முடிவு கட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பும். புதிய ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: உங்கள் எதார்த்தமான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள் பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டி விலகும்.

தனுசு: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் வந்து நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

மகரம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். கணவன்- மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் சமாளிப்பீர்கள்.

கும்பம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகன செலவு குறையும். எதிலும் நிதானம் தேவை.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நம்பிக்கை பிறக்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். பொருட்கள் சேரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக் கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in