Published : 07 Jun 2025 06:14 AM
Last Updated : 07 Jun 2025 06:14 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: முகப் பொலிவு கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர். நண்பர்கள் உதவுவர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். சக ஊழியர்கள், மேலதிகாரியின் ஆதரவுண்டு.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர். தடைகள் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் கூடும். உத்தியோகரீதியான பயணம் இருக்கும்.

மிதுனம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிட்டும்.

சிம்மம்: தாய்வழி உறவினருடன் இருந்த பகை நீங்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: பேசாமலிருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பீர்.

விருச்சிகம்: இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கடையை விரிவுபடுத்த முயற்சிப்பீர். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

தனுச: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர். உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்டஅணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் அதிசயத்தக்க ஏற்றமுண்டு.

மீனம்: குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும். மனைவி, தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x