Published : 10 May 2025 06:37 AM
Last Updated : 10 May 2025 06:37 AM
மேஷம்: அறிவுப்பூர்வமாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர். மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர். உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர். ஷேர் மூலம் பணம் வரும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். வியாபாரி சங்கத்தில் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்.
கடகம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறன் அங்கீகரிக்கப்படும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.
சிம்மம்: மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நண்பர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: வேற்றுமொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் மதிப்புயரும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
துலாம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் பாக்கியை வசூலிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு பயணம் அமையும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர்.
தனுசு: பயணங்கள் திருப்தி தரும். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர். தியானத்தில் மனம் செல்லும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மகரம்: பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர். செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கும்பம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். தடைபட்ட வேலை முடியும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: சிலர் பழைய சம்பவங்களை பேசி உங்களை காயப்படுத்துவர். குடும்பத்தில் விவாதம் வேண்டாம். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறிக் கொண்டிருக்காதீர். வியாபாரத்தில் நல்ல லாபமீட்டுவீர்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT