இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
மேஷம்: தம்பதிக்குள் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
ரிஷபம்: புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். வீண் அலைச்சல் குறையும். நினைத்த காரியம் நிறைவேறும். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கவுரவ பதவிகள் தேடி வரும். மகிழச்சிகரமான சூழல்கள் நிலவும். வியாபாரத்தில் முன்னேற்றமுண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர்.
கடகம்: பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். அடிப்படை வசதிகள் பெருகும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: தடைபட்டு கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்குவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கன்னி: குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும். உடல் சோர்வு, அலைச்சல் வந்து போகும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தில் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.
துலாம்: பிரச்சினைகளை சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். தடைகளை மீறி வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். அலுவலகரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு.
விருச்சிகம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
தனுசு: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
மகரம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். குடும்பத்தில் நல்லது நடக்கும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.
கும்பம்: சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் அன்பாக இருப்பர். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். கூடுதல் பொறுப்புகள் சேரும்.
மீனம்: காரியத் தடை, அலைச்சல் ஏற்படும். யாரிடமும் விவாதம் வேண்டாம். குடும்பத்தினரால் கையிருப்புகள் கரையக் கூடும். அலுவலகத்தில் இடமாற்றம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்.
