

மேஷம்: திடீர் வெளியூர் பயணம், அலைச்சல், அசதி இருக்கும். எடுத்த வேலை முடியவில்லையே என கோபப்படுவீர்கள். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்: வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன் யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகன பழுது நீங்கும்.
மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். வீடு, வாக னத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். அலுவலக பணியை விரைந்து முடிப்பீர்கள்.
கடகம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாமல் சிரமப்பட்ட நிலை மாறும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் போட்டிகளை தகர்ப்பீர்கள்.
சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என நினைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள்.
கன்னி: உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். வாயு கோளாறு காரணமாக, நெஞ்சுவலி வந்து போகும். உணவு கட்டுப்பாட்டில் அதிக கவனம் தேவை. குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
துலாம்: எதிலும் நிதானமாக செயல்படுங்கள். குடும்பத் தில் மூத்தோர் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வாகன பயணத்தின்போது அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் சரக்குகள் தேங்கும்.
விருச்சிகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மனம் நிம்மதியடையும். மனைவி வழியில் அந்தஸ்து உய ரும். பெற்றோர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மகரம்: சொந்த ஊரில் மரியாதை, அந்தஸ்து உயரும். கவுரவ பதவி, பொறுப்புகள் தேடி வரும். சகோதர உறவுகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பங்கு சந்தை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். பண புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வாகன பழுது நீங்கும்.