

மேஷம்: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணவரவு உண்டு. முன்கோபம் குறையும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர்.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் உங்கள் நிர்வாக திறமை வெளிப்படும்.
மிதுனம்: பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தம்பதிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகன பழுது நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். உத்தியோகத்தில் நிம்மதியுண்டு.
சிம்மம்: பேச்சில் நிதானம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.
கன்னி: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். கையில் பணம் புரளும். வி.ஐ.பிகளை சந்திப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகப் பிரச்சினை விலகும்.
துலாம்: சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். கையில் பணம் புரளும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மையுண்டு.
விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரம், உத்தியோக ரீதியாக பயணங்கள் உண்டு.
தனுசு: சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். எதிர்ப்பு, ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர். தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மகரம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்த குழப்பங்கள் விலகும். வீட்டில் புது பொருட்கள் வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கும்பம்: திடீர் பயணம் அலைச்சல் தரும். திட்டமிட்ட வேலையை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மீனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இணக்கமாக இருக்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவுண்டு.