இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: தாயாரின் மருத்துவ செலவு குறையும். உடன் பிறந்தோர் உதவிகரமாக நடந்து கொள்வர். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரம் சூடு பிடிக்கும். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

மிதுனம்: விலையுயர்ந்த கலைப் பொருட்கள் வாங்குவீர். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு லாபமீட்டுவீர். அலுவலகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் உண்டு. மேலதிகாரி பாராட்டுவார்.

கடகம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகுங்கள். தம்பதிக்குள் மனக்கசப்புகள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். புதிய பங்குதாரரை சேர்க்கும் போது எச்சரிக்கை அவசியம். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுப்படுத்தி கட்டுவீர். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்த மோதல் விலகும்.

கன்னி: திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். உறவினர், நண்பர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

துலாம்: புது சிந்தனையால் மனக்குழப்பங்கள் விலகும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். சேமிக்கும் எண்ணம் வரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

விருச்சிகம்: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் உயரதிகாரி முக்கிய விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்கமாவீர்கள்.

தனுசு: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். கடையில் சில மாற்றங்களை செய்வீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். தந்தைவழியில் நிம்மதியுண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். அலுவலகரீதியான பயணங்கள் அலைச்சல் தரும்.

மீனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர். வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in