

மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். செலவுகளைக் குறைத்து சேமிப்பீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலக ரீதியான பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தந்தைவழி உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல் விலகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாக கையாளவும்.
மிதுனம்: பூர்வீக சொத்து பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அறிவுரை தருவார்கள். வியாபாரத்தில் மேன்மையுண்டு.
கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதியுண்டு.
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
கன்னி: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. உத்தியோகத்தில் இழுபறி வேலைகளை உடனே முடிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
துலாம்: மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். சில காரியத் தடைகள் வரக்கூடும். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்: பணவரவு திருப்தி தரும். பழைய கடனைபைசல் செய்வீர். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு: பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வராக் கடன் வந்து சேரும். புதிய யுக்திகளை கையாண்டு முன்னேறுவீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கௌரவ பதவி தேடி வரும். மனைவிவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வீண் பேச்சை குறைத்து கொள்ளவும். அலுவலகரீதியாக புதிய சவால்களை சந்திப்பீர். வியாபாரத்தில் கவனம் தேவை.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தலைமையிடத்தின் ஆதரவை பெறுவீர்.
மீனம்: திட்டமிட்ட வேலைகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்